திருமழிசையில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் கடன் உதவிகள் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்கினார்

பதிவு:2022-09-04 23:35:44



திருமழிசையில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் கடன் உதவிகள் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்கினார்

திருமழிசையில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு ரூ.20.94 கோடி மதிப்பில் கடன் உதவிகள் : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா வழங்கினார்

திருவள்ளூர் செப் 03 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு தொழிற் கடன்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் எஸ்.மதுமதி முன்னிலை வகித்தார்.

முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், மேலாண்மை இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.59 கோடி மதிப்பீட்டில் தொழிற் கடன் விண்ணப்பங்களை பல்வேறு தொழில் முனைவோர்களிடமிருந்து பெற்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் தொழிற் கடன்களுக்கான ஆணைகளையும் ரூ.5.94 கோடி மதிப்பீட்டிலான காசோலைகளையும் என மொத்தம் ரூ.20.94 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவி வழங்கி பேசினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் புதிய தொழில்தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு தொழில் முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் இரண்டு இலக்குகளை நோக்கி தற்பொழுது செயலாற்றி வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை அடைய புதிய தொழில் நிறுவனங்களை தொழில் துவங்கிட ஊக்குவிப்பது ஆகும். இரண்டாவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியில் தமிழகம் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்தில் உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும்.

இதை நடைமுறைப்படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து தொழில் தொடங்கிட அவர்களுக்கு தேவையான முதலீட்டு கடன் உதவிகளை பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை அடைந்து நிலையாக தொழில்களை தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் சிறுஇ குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இவற்றை மேலும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறுஇ குறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் மேலும் சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்இ சிறுஇ குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வந்து தொழில் தொடங்கிட வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, மகளிர் தொழிற் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் , மேலாண்மை இயக்குநர் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த மகளிர் தொழிற் முனைவோர்களுக்கு கேடயங்களை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் நாச்சியாள் சோழன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்க கழக குழு இயக்குநர் எஸ்.ராஜேந்திரன், தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், முதன்மை மண்டல மேலாளர் ரமேஷ், தாய்கோ வங்கி முதன்மை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், துணை பொது மேலாளர் பழனிவேல், உதவி பொது மேலாளர் சித்ரா செண்பகவள்ளி, கிளை மேலாளர் பி.ஜி.அசோக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.