பதிவு:2022-09-05 14:38:53
திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்வந்தவர்கள் இரவு நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு : விசாரணைக்கு வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கியதில் தலையில் பலத்த காயம் : ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 8 பேரை கைது.செய்து விசாரணை :
திருவள்ளூர் செப் 05 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள புற காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் . இவர் நேற்று இரவு திருக்கோயில் வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரேணுகுண்டாவை அடுத்த ஆந்திரஜோதி பகுதியை நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடி எடுத்துக்கொண்டு மலைக் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது திருக்கோயில் ஒப்பந்த ஊழியர் வாகன நிறுத்தும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு நேரம் என்பதால் வாகனங்களை உள்ளே அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு தலையில் பலத்த அபாயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தகவல் அறிந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்ட் விக்னேஷ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த முனிராஜுலு, ஜெயச்சந்திரன், புருஷோத்தமன், வெங்கடாச்சல்,ராஜேஷ், உதயகுமார், முரளி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.