பதிவு:2022-09-06 17:12:54
தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் தகவல் :
திருவள்ளூர் செப் 06 : 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற் பிரிவில் ஐடிஐ-யில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் கூடுதல் தொழிற் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பொற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறும் பொருட்டு தனித் தேர்வராக விண்ணப்பிக்கலாம்.திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற் சான்திறழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற் பயிற்சி குழுமம் தொழிற் பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு , உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு முதல் எஸ்சிவிடி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த தகுதியின் கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து என்டிசி பெறலாம்.விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ.200/- www.karuvoolam.tn.gov.in என்ற இணைய.தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் பாரத ஸ்டேட்வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோம் இ.செல்லான் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு , கல்விச் சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 12.09.2022-க்குள் தனித்தேர்வர்கள் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேசிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.