திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

பதிவு:2022-09-06 17:15:27

திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை

:திருவள்ளூர் செப் 06 : ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்துவது தொடர் கதையாக உள்ளது. காவல்துறையினரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு களத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அகூர் காலனி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் தயவு செய்த போது 10 கிலோ எடை கொண்ட கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது. எதனை எடுத்து இளைஞரை கைது செய்து கஞ்சா செடியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.