பதிவு:2022-09-06 20:08:28
ஆவடி அருகே ரூ.2 கோடி மதிப்பிலான 5 பேரின் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிப்பு செய்த திமுக வட்ட செயலாளர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை :
திருவள்ளூர் செப் 06 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் . இவர் மிட்டனமல்லி கிராமத்தில் உள்ள 277/1- என்ற சர்வே எண்ணில் முகமதி மீரான், முத்தையா, சிவலிங்கம் , என்.எச்.சிங், நவநீதகிருஷ்ணன், சிவலிங்கம், ஏழுமலை ஆகியோர் சிஆர்பிஎப் நகர் என்று பெயரில் வீட்டுமனைகள் ஏற்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த 7 நபர்களின் பொது முகவரான சுகுமாறன் என்பவருக்கு கடந்த 2004ல்பொது அதிகாரம் பத்திரம் வழங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் பொது அதிகாரம் வழங்கியவரிடமிருந்து ரமேஷ், பிலிப்ஸ் ஆகியோர் வீட்டுமனை வாங்கியுள்ளனர். அதே போல் ரமேஷ், பிலிப்ஸ் உள்ளிட் 5 பேர் பத்திரப் பதிவு செய்து பட்டாவும் பெற்றுள்ளனர். இந்நிலையில் அந்த நிலத்தில் வீடுகட்டுவதற்காக வாங்கிய நிலத்தை சுத்தம் செய்த போது அதே மிட்டனமல்லி கிராமத்தில் வசிக்கும் டி.காந்தி மோகன், டி. இளங்கோவன், டி.தனசேகரன், டி.தில்லைநாதன், டி.திவாகரன், டி.சசிதரன், டி.தாரா ஆகியோர் போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ரமேஷ் என்பவர் மாற்றுத் திறனாளி என்பதை அறிந்து அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் ஆவடி மாநகராட்சி 3-வது வட்ட செயலாளர் டி.இளங்கோவன் என்பவரிடம் விசாரணை செய்து அவர் மீதுள்ள வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரமேஷ், பிலிப்ஸ் ஆகியோர் குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட ரமேஷ் பிலிப்ஸ் உள்ளிட்ட 5 பேரின் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த திமுக வட்ட செயலாளர் இளங்கோவன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளி்த்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவி்த்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.