திருவள்ளூரில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் திருக்கோவில் ஜாத்திரை உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கோலம் கொண்ட அம்மன் கோயிலில் இருந்து வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது :

பதிவு:2022-09-07 22:12:23

திருவள்ளூர் செப் 07 : திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் கடந்த 2-ம்தேதி தொடங்கியது.அதனைத் தொடர்ந்து ஐந்தாம் நாளான இன்று முகமது அலி தெருவில் உள்ள ஸ்ரீ கோலம் கொண்ட அம்மன் திருக்கோவிலில் இருந்து சகோதரி வீடான வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அம்மனுக்கு இனிப்பு வகைகள் பழ வகைகள் , பலவிதமான மலர்கள், வேட்டி சேலையுடன் சீதனத்துடன் புறப்பட்டு தாரை தப்பட்டை. பம்பை உடுக்கை‌ சிலம்பு ஆகியவற்றுடன் முகமது அலி தெருவில் இருந்து புறப்பட்டு பஜார் வீதி, வட்ககுராஜ வீதி மோதிலால் தெரு, காக்களூர் சாலை வழியாக வேம்புலி அம்மன் திருக்கோவிலை அடைந்தது.தொடர்ந்து வேம்புலி அம்மன் திருவீதி உலாவும் இரவு நடைபெற்றதுவிழாவிற்கான ஏற்பாடுகளை திருவிழா குழு அருள்மிகு வேம்புலி அம்மன் சேவை சங்கம் மற்றும் கிராமத்தார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.