பூந்தமல்லி அடுத்த வெள்ளியூரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 126 பயளாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார் :

பதிவு:2022-12-27 19:21:41



பூந்தமல்லி அடுத்த வெள்ளியூரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 126 பயளாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார் :

பூந்தமல்லி அடுத்த வெள்ளியூரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 126 பயளாளிகளுக்கு  விலையில்லா ஆடுகள் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார் :

திருவள்ளூர் செப் 07 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட வெள்ளியூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 126 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி 126 பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குனர் எம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் ஒன்றிய குழுதலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் பர்க்கத்துல்லா கான் ஆகியோர் வரவேற்றனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது . அதே போல் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் விலையில்லா ஆடுகளை வழங்க வேண்டும் என்ற உத்தரவின் பேரில் இன்று, ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 5 ஆட்டுக்குட்டிகளும், ஆயிரம் ரூபாய்க்கு கால்நடைக்கு தேவையான உணவு வாங்கவும், 2 வருட இன்சூரன்ஸ் 500 ரூபாய் என மொத்தம் 19 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் 126 பயனாளிகளுக்கும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 400 ரூபாய்மதிப்பில் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அரசால் வழங்கப்படும் ஆடுகளை முறையாக பராமரித்து வளர்த்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என எம்எல்ஏ ., ஆ.கிருஷ்ணசாமி ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், ஒன்றியதுணை செயலாளர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் தென்னவன், கே.விமலாகுமார், ஊராட்சி மன்றத்தலைவர் பப்பி முனுசாமி, எல்லாபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வி.ஜே.சீனிவாசன், எம்.குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.பாஸ்கர், ஜி.அன்பு, ட்டி.பாஸ்கர், யூ.சீனிவாசன், நிர்வாகிகள் கொமக்கம்பேடு முன்னாள்தலைவர் தங்கராஜ், செம்பேடு ஏ.சுப்பிரமணி, மற்றும் மருத்துவர்கள் வெங்கட்ராமணன், பொற்கொடி, கார்த்திகேயபிரபு, லோகநாதன், அருண், கீதா, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.