முகநூலில் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி வன்கொடுமை : கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்பி யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் :

பதிவு:2022-09-07 23:38:38



முகநூலில் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி வன்கொடுமை : கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்பி யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் :

முகநூலில் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி வன்கொடுமை : கணவர், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது எஸ்பி யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் :

திருவள்ளூர் செப் 07 : கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் இவரது மகள் அன்பரசி (25). இவர் இளநிலை பட்டம் பெற்று பெரம்பலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இவருக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த சின்னக்களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் லட்சுமணன் என்பவர் கடந்த 2018-ல் முகநூல் (பேஸ்புக்) மூலம் அறிமுகமாகி காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அன்பரசி தான் மாற்று சமுகத்தை சேர்ந்த பெண் என்று கூறி மறுத்து விட்ட நிலையில் லட்சுமணன் மற்றும் குடும்பத்தார் அன்பரசி வீட்டுக்குச் சென்று முறைப்படி பெண் கேட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணமும், 7 சவரன் தங்க நகையும் வரதட்சணையாக அளித்து அளித்துள்ளனர். திருமணம் நடந்த அன்று முதலே மேலும் ஒரு லட்சம் ரொக்கமும் மூன்று சவரம் தங்க நகை வரதட்சணையாக கேட்டு கணவர் லட்சுமணன், மாமியார் தேவகி, அண்ணன் கருணாகரன், அண்ணன் மனைவி பாக்கியலட்சுமி, கணவரின் தங்கை சாந்தலட்சுமி. சாந்தலட்சுமியின் கணவர் பாலாஜி. ஆகியோர் ஜாதி வன்கொடுமை செய்து உணவு உண்ண தனி தட்டு, தனி அறை ஆகியவற்றை ஒதுக்கி தனிமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டையாதால் வெளியே சொல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும். இதற்கிடையே கர்ப்பம் அடைந்த அன்பரசி பிரசவத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். தாய் வீட்டுக்குச் சென்ற அன்பரசிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை கணவருக்கும் கணவர் வீட்டிற்கும் தெரியப்படுத்தி உள்ளனர்.ஆனால் குழந்தையை பார்க்க யாரும் வரவில்லை. ஒரு வாரம் கழித்து கணவர் லட்சுமணன் மற்றும் பார்க்க வந்ததையடுத்து ஐந்து மாதம் கழித்து மீண்டும் பெண் குழந்தையுடன் கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். கணவர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் ஜாதி வெறி பிடித்த கணவர் வீட்டினர் அன்பரசியையும் பிறந்த குழந்தையும் தொடக்கூடாது எனக்கூறி இழிவாக பேசி குழந்தைக்கு உணவு கூட வழியின்றி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம்பெண் அன்பரசியின் கணவருக்கும் வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டதால் என்னையும் என் குழந்தையையும் சாதி தீண்டாமை வெறி பிடித்த கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.மேலும் கடந்த 3- ஆம் தேதி என்னை பெண் என்று பாராமல் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி நைட்டியை பிடித்து கிழித்து அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.

இதனால் அன்பரசி திருத்தணி அனைத்து மக்களும் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 6 பக்கம் கொண்ட புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து திரும்பி சென்றனர். மேலும் மருமகள் அன்பரசி அன்பரசிக்கும் மாமியார் தேவகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மாமியார் தேவகி மருமகளை தொடப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.