பள்ளிப்பட்டு பகுதியில் பூஜை செய்தால் நகை பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறி 6 சவரன் நகையை அள்ளிச்சென்ற 2 பேர் கைது :

பதிவு:2022-09-08 14:09:47

பள்ளிப்பட்டு பகுதியில் பூஜை செய்தால் நகை பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறி 6 சவரன் நகையை அள்ளிச்சென்ற 2 பேர் கைது :

பள்ளிப்பட்டு பகுதியில் பூஜை செய்தால் நகை பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறி 6 சவரன் நகையை அள்ளிச்சென்ற 2 பேர் கைது :

திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரபாபு. 62 வயது விவசாயியான இவர் கடந்த 3-ந் தேதி பள்ளிப்பட்டு-சோளிங்கர் ரோடு பகுதியில் 2 நபர்கள் ஜோதிடம் பார்ப்பதாக விளம்பர பலகை வைத்திருந்ததை பார்த்துள்ளார். அப்போது, அவர்களிடம் பேசிய முதியவரிடம் அம்மன் சிலைக்கு நகைகளை மாட்டி லட்சுமி பூஜை செய்ய வேண்டும் , அவ்வாறு செய்தால் வீட்டில் உள்ள பிரச்சினைகள் தீரும், நகை பணம் சேரும் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தனது மனைவியின் தங்கத் தாலி 6 சவரன் நகையை வீட்டிலிருந்து கொண்டுவந்து சாமி சிலைக்கு அணிவிக்க கொடுத்துள்ளார். இரவு முழுவதும் பூஜை நடைபெறும் என்றும் மறுநாள் வருமாறும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மறுநாள் வந்து பார்த்த போது அங்கு யாரும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில் பூஜை செய்தால் நகை பணம் சேரும் என ஆசை வார்த்தை கூறியது ஆந்திர மாநிலம் கங்காவரம் பகுதியைச் சேர்ந்த ஹேமத்குமார் (27) மற்றும் ராமு (25) என தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் நூதன முறையில் நகைகளை அள்ளிச் சென்றவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.