திருத்தணி துணை வட்டாட்சியர் வீட்டு சமையலறையில் புகுந்த சாரைப் பாம்பால் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்

பதிவு:2022-09-08 14:13:40



திருத்தணி துணை வட்டாட்சியர் வீட்டு சமையலறையில் புகுந்த சாரைப் பாம்பால் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம். தீயணைப்பு வீரர்கள் பாம்பை லாவகமாக பிடித்து வனப் பகுதியில் விட்டனர் :

திருத்தணி துணை வட்டாட்சியர் வீட்டு சமையலறையில் புகுந்த சாரைப் பாம்பால் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்

திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் துணை வட்டாட்சியராக இருப்பவர் சந்திரசேகர். இவர் தனது குடும்பத்தாருடன் திருத்தணி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை அவரது வீட்டு சமையலறைக்குள் சாரைப் பாம்பு ஒன்று திடீரென புகுந்துள்ளது.

இதனால் வீட்டிலிருந்து துணை வட்டாட்சியர் சந்திரசேகர், அவரது மனைவி, மகள், பேரப் பிள்ளை ஆகியோர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இது குறித்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சமையலறைக்குள் பாத்திரங்களுக்கிடையில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி லாவகமாக பிடித்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட சாரைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இதனையடுத்து துணை வட்டாட்சியர் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.