பதிவு:2022-04-01 00:36:19
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அப்போது விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பது, பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதேபோல், ஒவ்வொரு முறையும் போக்குவரத்து நிறைந்த சாலைகளை கடக்கும் போது இருபுறமும் பார்த்து கவனமாக கடப்பது உள்ளிட்டவைகள் குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் விளக்கமாக பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பாக கடப்போம் எனவும் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்,உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.