பதிவு:2022-09-08 22:26:16
திருவள்ளுர் அடுத்த வெள்ளியூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலைய துவக்க விழா நடைபெறறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) முனைவர்.எல்.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன்,திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் பர்க்கத்துல்லாகான், மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டி.முரளி கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடமிருந்து கொண்டு வரப்பட்ட நெல்களை தூற்றும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து, அரசு விதிகளுக்குட்பட்டு நெல்கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்து, எதிர்வரும் சம்பா பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஏதுவாக 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கிப் பேசினார்.
திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த காரீப் கொள்முதல் 2021-22 பருவத்தில் அரசு கட்டிடங்களில் மட்டுமே நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ரூ.228 கோடி தொகையில் 1,11,225 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,942 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை தரமான அரிசியாக்கி 75,000 மெட்ரிக் டன் பொது விநியோகத் திட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நடப்பு சொர்ணவாரி கொள்முதல் 2022-23 பருவத்தில் 25 ஆயிரத்து 340 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில், ஒரு ஹெக்டருக்கு 6 மெட்ரிக் டன் சராசரி மகசூல் வீதம் 1,52,000 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்;கப்படுகிறது. இதில் விற்பனை உபரி 65,000 மெட்ரிக் டன் என கணக்கிடப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 52 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனம் மூலமாக 4 இடங்களிலும், தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடனடியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டம் குருபுரம் கிராமத்தில் முதல் முறையாக 5 ஏக்கர் பரப்பளவில் 35000 மெட்ரிக் டன் நெல் மணிகள் சேமித்து வைப்பதற்கான திறந்த வெளி சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்மணிகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், நிரந்தர திறந்த வெளி சேமிப்பு மையம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் திருவள்ளுர் - திருவாரூர் மாவட்டங்களுக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு; உள்ளதைத் தொடர்ந்து, குருபுரம் கிராமத்தில் 10,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது. இதனால் வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமித்து வைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கூறினார்..
இதில் மாவட்ட கவுன்சிலர் இந்திரா பொன்குணசேகர், ஊராட்சி மன்றத்தலைவர் பப்பி முனுசாமி, நிர்வாகிகள் மனோகரன், கே.விமலாகுமார், வி.கன்னியப்பன், டி.மூர்த்தி, பி.நாகராஜ், கெஜா, வி.எம்.முருகேசன்,இ.பி.ரவி, அஜித்குமார், குணா, எம்.நாகராஜ், எஸ்.நரசிம்மன், பி.பிரபு, முருகைய்யன், யுவராணி, குட்டி, அர்ஜூனன், ஆனந்தன், சிற்றரசு, சுரேஷ் ,சர்தார்பாய், டில்லி, ஏழுமலை, ரஜினி , கிரிஜா, ஜெயம்மாள், எஸ்.தேவி, தரணி, மகா, நசீர் , உள்பட பலர் கலந்து கொண்டனர்.