குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 80 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

பதிவு:2022-09-08 22:29:11



குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 80 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 80 மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 80 மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச மிதிவண்டிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கல்வியாண்டில் தமிழக மாணவ, மாணவியர்களின் கல்விக்காக மட்டும் எந்த மாநில அரசும் செய்யாத அளவில் ஏறக்குறைய ரூ.36,896 கோடி நிதியை கல்விக்கென்று ஒதுக்கியுள்ளார்கள்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அவர்கள் முழுமையாக கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும். கல்வியறிவு பெற்ற நாடு எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளில் வல்லரசாக விளங்கும் என்பதனை முழுமையாக அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக பெண்கள் உயர்கல்வி பெறும் சதவிகிதம் குறைவாக காணப்படுவதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதை ஊக்கப்படுத்தும் விதமாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் தலா ரூ.1000-ம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, சிறப்பான முயையில் அத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள்.

இத்திட்டம் பெண் கல்வியை மேம்படுத்தி பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளை மேம்படைய செய்ய ஓர் சிறந்த படிக்கல்லா அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் குருவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 80 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதுபோன்ற தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் சிறந்து விளங்கிட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் செ.ராதாகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர் வெங்கட்டம்மாள், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.