திருவள்ளூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சி துவக்க விழா :

பதிவு:2022-09-08 22:31:03



திருவள்ளூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சி துவக்க விழா :

திருவள்ளூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய தையல் பயிற்சி துவக்க விழா :

திருவள்ளூர் செப் 08 : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நிதியுதவியுடன் நகர்ப்புறத்தில் வாழும் பெண்களுக்கு லீட்ஸ் தொழில்திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 3 மாத தையல் பயிற்சி (செக்கர் இன்லைன் மெஷர்மென்ட்) திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள லீட்ஸ் தொழில்திறன் பயிற்சி மையத்தில் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழாவை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குனர் மல்லிகா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார்.

இப்பயிற்சியானது 18 முதல் 35 வயதிற்குட்பட்ட ஏழை எளிய பெண்களை கண்டறிந்து உதவி தொகையுடன் கூடிய மூன்று மாத தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. தையல் பயிற்சியோடு ஆங்கில உரையாடல் மற்றும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி திறன்களை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் இங்கு அளிக்கப்பட உள்ளதாகவும் இவைகள் உங்கள் வாழ்க்கை திறனை உயர்த்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் இந்த 3 மாத கால தையல் பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் மற்றும் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக் கூடிய நீங்கள் சிறந்த திறமை வாய்ந்த தையல் கலைஞராக உருவாக வேண்டும் என்றும் உங்கள் வாழ்வியல் திறன்களை மேம்படுத்த இப்பயிற்சி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் திட்ட இயக்குனர் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர் கல்பனா கலந்து கொண்டார். பயிற்சியாளருக்கு சீருடை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை திட்ட இயக்குனர் மல்லிகா முன்னிலையில் லீட்ஸ் தொழிற்பயிற்சி நிறுவனம் வழங்கியது.

இதில் லீட்ஸ் தொழில்திறன் பயிற்சி நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர்.ராஜாராம்,திட்ட அலுவலர் நடராஜ், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், திட்ட மேலாளர் விஜயன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.