பதிவு:2022-09-08 22:33:27
திருவள்ளுர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியில் பங்குபெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள் போட்டி வயது அடிப்படையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 13 வயதிற்குள் உள்ளவர்கள்15 கி.மீ மாணவர்களும்,மாணவிகள் 10 கி.மீட்டர் தூரத்திற்கும் போட்டி நடைபெறுகிறது. அதே போல் 15 வயதிற்குள் மாணவர்கள் 20 கி.மீ. மாணலவிகள் 15 கி.மீ.தூரத்திற்கும், 17 வயதிற்குள் மாணவர்கள் 20 கி.மீ. மாணவிகள் 15 கி.மீ.தூரத்திற்கும் போட்டி நடைபெறும்.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையான தலா ரூ.5000,ரூ.3000, ரூ.2000 வீதமும், 4 முதல் 10-ஆம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இப்போட்டியில் பங்கேற்றிடும் மாணவ, மாணவியர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிதிவண்டிகளை தாங்களே கொண்டு வருதல் வேண்டும். மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் 15.09.2022 அன்று காலை 6.30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து துவங்கி ஊத்துக்கோட்டை ரோடு பூண்டி வரை சென்று மீண்டும் திரும்பி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை வந்தடைதல் வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் வகுப்பு, பிறந்த தேதியிட்ட சான்றிதழ் தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று dsotvlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிலோ, 7401703482 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகம் திருவள்ளுர் என்ற முகவரிக்கோ நேரிலோ, தபால் மூலமாகவோ 13.09.2022-க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
போட்டி நடைபெறும் அன்று மாணவ, மாணவிகள் வகுப்பு மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்களிடமிருந்து பெற்று நேரில் கொண்டுவருதல் வேண்டும்.இப்போட்டியில் பங்குகேற்பவர்களுக்கு உணவுபடி, தினப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு அன்று காலை 10.00 மணிக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட 3 மாணவ , 3 மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5000-ம் இரண்டாம் பரிசு ரூ.3000-ம், மூன்றாம் பரிசு ரூ.2000-ம் மற்றும் 4 முதல் 10-ஆம் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.250-ம் வழங்கப்படும். இப்போட்டியில் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவ மாணவியர்களை உரிய நேரத்தில் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.