திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 10 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-09-08 22:35:56

திருவள்ளூர் செப் 08 : திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் பிரதிமாதம் ஒரு கிராமம் என நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி வருகின்ற 10.09.2022 தேதி திருவள்ளூர் வட்டம்,இரங்காபுரம் நியாய விலைக்கடை அருகில்,ஊத்துக்கோட்டை வட்டம், நெல்வாய் நியாய விலைக்கடை அருகில்,பூந்தமல்லி வட்டம்,மேட்டுப்பாளையம் சமுதாயக்கூடம்,திருத்தணி வட்டம்,மணவூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,பள்ளிப்பட்டு வட்டம்,பேட்டை கண்டிகை நியாய விலைக்கடை அருகில்,பொன்னேரி வட்டம், திருப்பேர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி வட்டம்,பன்பாக்கம் நியாய விலைக்கடை அருகில்,ஆவடி வட்டம்,நடுகுத்தகை திருநின்றவூர் ‘அ’ கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,ஆர்.கே.பேட்டை வட்டம்,ஜி.சி.எஸ்.கண்டிகை நியாய விலைக்கடை அருகில் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைப்பெறவுள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறும், மேற்படி அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.