திருவள்ளூர் அருகே டி.ஆர்.எஸ். ஆர்த்தோ கிளினிக் : எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

பதிவு:2022-09-09 12:23:43



திருவள்ளூர் அருகே டி.ஆர்.எஸ். ஆர்த்தோ கிளினிக் : எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

திருவள்ளூர் அருகே டி.ஆர்.எஸ். ஆர்த்தோ கிளினிக் : எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையி் டிஆர்எஸ். ஆர்த்தோ கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.இந்த திறப்பு விழாவிற்கு மருத்துவமனை நிர்வாகி டி.ஆர்.எஸ்.சந்துரு தலைமை வகித்தார். மருத்துவர்கள் அருண்குமார், திவ்யஸ்ரீ ஆகியோர் வரவேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் எம்,எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு டி.ஆர்.எஸ் ஆர்த்தோ கிளினிக்கை குத்துவிளக்கேற்றி,ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவ உபகரணங்களையும், மருத்துவமனையையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் வி.கிருஷ்ணன், டிஆர்எஸ் சங்கர், டிஆர்எஸ்.ஜோதி, டிஆர்எஸ்.சண்முகம், டிஆர்எஸ்.சந்துரு, கந்தன் சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். . அதே போல் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் க.ஹரிகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் பொன்.பாண்டியன், பிரகாஷ், லாலு, கொப்பூர் திலீப்குமார், புட்லூர் ஆர்.ராஜேந்திரகுமார், ஆர்.மோகனசுந்தரம், ஏ.எஸ்.மணி, தி.ஆ.கமலக்கண்ணன், டிஎன்ஆர் சீனிவாசன், டி.செல்வகுமார், தாடி நந்தகுமார், அயூப் அலி, உலகநாதன், பாலு, டிஎன்.பன்னீர், பாலா (எ) பாலயோகி, வெங்கடேசன், இ.தினேஷ்குமார், ஜேக்கப் ஜெயராஜ், எம்.எஸ்.கே.குமார், மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.