பதிவு:2022-09-09 12:36:00
திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் சிறப்பு முகாம்
திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் ஆணையர் கே.கோபால் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் த.கண்ணன் ஆகியோரின் ஆய்வு கூட்ட அறிவுரைகளின்படியும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரிலும் திருவள்ளூர் மண்டல அதிகாரி சண்முகம் ஆகியோரின் அறிவுரைகளின் படியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமையில் பேரூராட்சி தலைவர் வடிவேலு, துணைத்தலைவர் மகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒத்தாண்டீஸ்வரர் கோயில் மற்றும் தெற்க மாடவீதி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் போது 205 நபர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதில் 25 விண்ணப்பதாரர்கள் வைப்புத் தொகைக்கான வங்கி வரைவோலையுடன் இணைந்து அளித்துள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தெரிவித்துள்ளார்.