திருத்தணி அருகே சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே 39 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

பதிவு:2022-09-09 12:39:46



திருத்தணி அருகே சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே 39 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு : பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு

திருத்தணி அருகே சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே 39 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணதுரை தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டம் பாண்டியநல்லுார் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (39) என்பதும் அம்பத்துார் எஸ்டேட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு ரயில் மார்க்கமாக திரும்பிய போது திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி பின் சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே சென்று அவரது பையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவந்தது.

அதனையடுத்து அவர் பாக்கெட்டில் இருந்த ஐடி கார்டு மற்றும் செல்போனை ஆய்வு செய்து அதில் இருந்த அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில் மற்றும் அவரது பையுடன் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்சினையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா எதற்காக தற்கொலை செய்தார் அல்லது வேரு யாரேனும் சதி செயலில் ஈடுபட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.