திருமுல்லைவாயலில் அரசு பள்ளி ஆசிரியையின் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை

பதிவு:2022-09-09 12:50:42



திருமுல்லைவாயலில் அரசு பள்ளி ஆசிரியையின் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை

திருமுல்லைவாயலில் அரசு பள்ளி ஆசிரியையின் மகள் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் செப் 09 : ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் இந்திரா நகரில் வசித்து வரும் ,அமுதா இவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராகபணிந்து வருகிறார், இவன் மகளான மாணவி லக்ஷ்ணா ஸ்வேதா இவர், அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் 2019 ஆண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆன்லைனில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்தார் இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி நீட் தேர்வு எழுதியதாகவும் அதன் ரிசல்ட் இன்று அதிகாலை வந்ததாகவும் அதில் தோல்வி அடைந்ததை பார்த்துவிட்டு மன வருத்தத்தில் தனக்குத்தானே ஹாலில் உள்ள தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட திருமுல்லைவாயில் காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெயசுதா பிளஸ் 2 முடித்த இவர் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடந்த17-ந் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார். இந்நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதில் மாணவி ஜெயசுதா குறைவான் மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயசுதா வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மாணவியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனை முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.