திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-09-09 13:57:51



திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் : மாவட்ட  ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அல்பெண்டசோல் மாத்திரையை சாப்பிட்டு, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கி பேசினார்.

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று செப்டம்பர், 9-ம் நாள் தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.குடற்புழுவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறது. இந்நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடாகும். இந்நோய்யின் அடிப்படை தாக்கமாவது குழந்தைகள் எடை குறைவாக இருப்பது, உயரம் குறைவாக இருப்பது, பெண்களுக்கு அதாவது பாலூட்டும் தாய்மார்களுக்கு எடை குறைவாக காணப்படும், இரத்த சோகை காணப்படும். இவையே, இந்நோய்யிற்கு அறிகுறியாகும்.

மேலும், 30 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய பெண்களுக்கும் 19 வயதிற்கு கீழ் இருக்கக் கூடிய அனைத்து ஆண்களுக்கும் ஒரே நாளில் இந்த அல்பெண்டசோல் மாத்திரை வழங்கும் திட்டம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த குடற்புழு நீக்க நாள் முகாம் நடத்தப்பட்டு, 1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 1 முழு மாத்திரையும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர இதர பெண்களுக்கு ஒரு முழு மாத்திரையும் என வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை 30 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமின்றி 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 7,06,624 குழந்தைகளுக்கும், 2,46,977 பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,428 பள்ளிகளிலும், 456 தனியார் பள்ளிகளிலும், 68 கல்லூரிகளிலும், 1,756 அங்கன்வாடி மையங்களிலும் என மொத்தம் 3,708 மையங்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என 4,322 பணியாளர்கள் மூலமாக இம்மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 16.09.2022 அன்று அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கைகளை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செய்முறை விளக்க அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.

இதில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் எம்.ஏ.இளங்கோவன், திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜவஹர்லால், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், கச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலமணிகண்டன், திருப்பாச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபன் பாபு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.