திருமண மண்டபத்தில் உறவினர் போல் நடித்து 6 சவரன் தங்க நகை திருட்டு : நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் :

பதிவு:2022-09-10 11:45:01



திருமண மண்டபத்தில் உறவினர் போல் நடித்து 6 சவரன் தங்க நகை திருட்டு : நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் :

திருமண மண்டபத்தில் உறவினர் போல் நடித்து 6 சவரன் தங்க நகை திருட்டு : நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட  பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் :

திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(59). நேற்று மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் ஜானகிராமனுக்கும் ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது உறவுக்கார பெண் என்று கூறி முக கவசம் அணிந்து கொண்டும் கண் கண்ணாடி அணிந்தும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் நேராக ஜானகிராமனின் மகள் தங்கி இருந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது மணமகனின் உறவினர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று, தனக்கு தலைவலி அதிகமாக இருப்பதாகவும் மாத்திரை போட வேண்டும் எனவும் சொல்லி மணமகளின் அத்தை என அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் மாத்திரையை போட்டவர் அங்கேயே உட்கார்ந்துள்ளார். அப்போது மணமகனின் உறவுக்கார பெண் ஒருவர் புடவை மாற்றும் போது அவருக்கு உதவி செய்வது போல் நடந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்து சென்ற அந்த மர்ம பெண் மணமகள் அறைக்கு சென்று, மணமகள் அணிந்து கழற்றி வைத்திருந்த 6 பவுன் தங்க டாலர் செயினை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். 9 மணி முதல் 10:30 வரை முகூர்த்த நேரம் என்ற நிலையில் 8. 58 மணி அளவில் அங்கிருந்து அந்த மர்ம பெண் மாயமானார். அந்த பெண் மாயமான பிறகு நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் கொடுத்த தகவலின் பெயரில் மணமகனின் தந்தை பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமண மண்டபத்தில் பதிவான சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.திருமண மண்டபத்தில் உறவுக்கார பெண் போல் நடித்து ஆறு பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.