திருப்பதிக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு : வீரராகவர் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை

பதிவு:2022-09-10 11:55:48



திருப்பதிக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு : வீரராகவர் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை

திருப்பதிக்கு செல்லும் வழியில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு : வீரராகவர் கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை

திருவள்ளூர் செப் 10 : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும்‌, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெருக்கூத்து கலைஞர்களின் கூத்து, கேரளா மேளம், நாதஸ்வர கலைஞர்களின் இசை. பேண்டு வாத்தியத்துடன் மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் நின்றவாறு பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலின் பூரண கும்ப மரியாதை செலுத்தி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வரவேற்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம், பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடைக்கால பொதுச்செயலாளருக்கு மலர்ச் செண்டு கொடுத்த சால்வை அணிவித்து வரவேற்றனர். அதே போல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர். இதில் இடைக்கால பொதுச் செயலாளருக்கு கிரீடம் அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தார்.அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு சென்றார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு வந்தார். அவருக்கு திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கழக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் அதிமுக வினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

திருத்தணி சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் வழங்கியும், கேரளா சண்டி மேளம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பெண்கள் சாலைக்கு இருபுறமும் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஏற்பாட்டில் வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி வேல் வழங்கினர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி உற்சாகத்துடன் கையசைத்து வரவேற்பை ஏற்று அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.