காக்களூர் ஏரியை தூர்வாரி, ஏரியை சுற்றி நடைப்பாதை அமைத்து படகு சவாரி வசதி ஏற்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

பதிவு:2022-09-12 20:25:19



காக்களூர் ஏரியை தூர்வாரி, ஏரியை சுற்றி நடைப்பாதை அமைத்து படகு சவாரி வசதி ஏற்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

காக்களூர் ஏரியை தூர்வாரி, ஏரியை சுற்றி நடைப்பாதை அமைத்து படகு சவாரி வசதி ஏற்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும் : பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய பழஞ்சூர், பாப்பன்சத்திரம் ஆகிய இரு கிராமங்களின் வருவாய்த்துறை (Revenue) மட்டும் காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் தாலுக்காவில் உள்ளது. அதனை திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்காவிற்கு மாற்ற வேண்டும். மேலும் அதனை திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்கா, சார்பதிவக அலுவலகத்திற்கு நிரந்தரமாக மாற்ற வேண்டும்.

அதே போல் பூவிருந்தவல்லி சின்ன மாங்காடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியர் அலுவலகம் குன்றத்தூர் தாலுக்காவில் உள்ளது. அதனை திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்காவிற்கு மாற்ற வேண்டும் மற்றும் திருவள்ளூர் தாலுக்காவில் உள்ள கன்னிகாபுரம் கிராமத்தின் வருவாய் மட்டும் கோடுவெளி கிராமத்தில் உள்ளது. எனவே கன்னிகாபுரம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும்.

பூவிருந்தவல்லி நகரம் மற்றும் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குப்பை கொட்டும் இடம் இல்லை. தற்போது 1.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குடியிருப்புக்கு குப்பை சேமிக்கும் கிடங்கு 5 ஏக்கரில் அமைத்துத்தர வேண்டும்.பூவிருந்தவல்லி நகரம் கன்டோன்மென்ட் புறம்போக்கு இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 2000 குடும்பங்கள் வீடுகட்டி பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் பூவிருந்தவல்லி தாலுக்கா ஜெமின்கொரட்டூர் மற்றும் திருமழிசை பகுதியில் 150 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதிதிராவிடர்கள் பகுதி தவறுதலாக வருவாய் கணக்கில் கோயில் நிலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பட்டா வழங்குவதில் சிக்கல் தொடர்கிறது. அதனை கிராம நத்தம் என்று கணக்கில் கொண்டுவந்து பட்டா வழங்கிட வேண்டும். பூவிருந்தவல்லி பாதாளா சாக்கடை திட்டம் நிலுவையில் உள்ளது, அதனை அமல்படுத்த வேண்டும் மற்றும் திருமழிசை பேரூராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த வேண்டும்.

காக்களூர் ஏரியை தூர்வாரி, ஏரியை சுற்றி நடைப்பாதை அமைத்து மற்றும் படகு சவாரி வசதி ஏற்படுத்தி சுற்றுலா மையமாக்க வேண்டும் மற்றும் திருவள்ளூர் ஒன்றியம், புட்லூர் அங்கால பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே உள்ள தண்ணீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட ஏரியை தூர்வாரி கரையை அகல படுத்தி நடைபாதை அமைத்து, படகு சவாரி ஏற்படுத்தி பொழுதுபோக்கு தளமாக்க வேண்டும்

காக்களூர் மற்றும் திருமழிசை பகுதியில் மின்மயானம் அமைத்தல்.கெருக்கம்பூண்டி கிராமத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேல்செம்பேடு கிராமத்திற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும். பூவிருந்தவல்லியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.புட்லூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமான 55.2 ஏக்கர் இடத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.திருமழிசை பேரூராட்சி மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் இல்லை. ஆகவே திருமழிசை மற்றும் பூவிருந்தவல்லியில் 6 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

வேப்பம்பட்டு, செவ்வாபேட்டை மற்றும் புட்லூர் இரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு பல வருடங்கள்ளாகியும் இதுநாள் வரை முடிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிமக்கள் தண்டவாளத்தை கடக்க முடியாமல் பல கிலோமீட்டர் சுற்றிவர வேண்டியுள்ளது. எனவே அப்பகுதி மக்களின் பல வருடக்கால மிக்கிய கோரிக்கையான வேப்பம்பட்டு, செவ்வாபேட்டை மற்றும் புட்லூர் இரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அந்த மனுவில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.