திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன பூங்காக்களை கண்டுபிடித்து தருமாறு நகர் மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களும் நகர் மன்றக் கூட்டத்தில் புகார் :

பதிவு:2022-04-02 01:16:13

திருவள்ளூர் ஏப் 02 : நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் நகராட்சியில் திமுக வைச் சேர்ந்த உதயமலர் பாண்டியன் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர் மீரான் ஒளி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கந்தசாமி, சுமித்ரா வெங்கடேசன், மற்றும் சித்ரா விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான கோரிக்கைகளை முன் வைத்தார்.

அப்போது 7வது வார்டு சுயேட்சை உறுப்பினர் பிரபு பேசும் போது, தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆட்சியில் எல்கேஜி முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள நகராட்சிப் பள்ளி தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், அதற்கு வாடகை செலுத்தாததால் காலி செய்ய சொல்லி கட்டிட உரிமையாளர் நோட்டிஸ் கொடுத்திருப்பதால் அந்த பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக புகார் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 12-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் தாமஸ் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா சீரமைக்கப்பட்ட நிலையில் அந்த இடம் தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்றத் தலைவர் விரைந்து செயல்பட்டு பூங்காவை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் 11-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் வி.இ.ஜான் பேசும் போது, தனது வார்டில் உள்ள பூங்கா புதர்மண்டி பாழடைந்து கிடப்பதாகவும் அதை சீர்படுத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனை பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என கோரக்கை விடுத்தார்.

அதேபோல் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு உறுப்பினர்களும் பூங்கா காணவில்லை.பூங்காவை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால் நகர் மன்றக் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது. .