பழவேற்காடு பகுதியில் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் : தாட்கோ கழகத் தலைவர் உ.மதிவாணன் வழங்கினார் :

பதிவு:2022-09-13 14:28:50



பழவேற்காடு பகுதியில் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் : தாட்கோ கழகத் தலைவர் உ.மதிவாணன் வழங்கினார் :

பழவேற்காடு பகுதியில் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் : தாட்கோ கழகத் தலைவர் உ.மதிவாணன் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 13 : பழவேற்காடு சமூக நல கூடத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக பழவேற்காடு பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கான படகு, வலைகள் மற்றும் இதர உபகரணம் வாங்குவதற்கு தேவையான நிதியுதவியை தாட்கோ மானியத்துடன் கூடிய வங்கி கடன்களாக வழங்குதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தாட்கோ கழகத் தலைவர் உ.மதிவாணன் தலைமை தாங்கி தெரிவித்ததாவது :

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களுக்கு தொழில் முனைவோராக உருவாக்கி உயர்த்தும் நோக்கில் பொருளாதார கடனுதவி ஆதிதிராவிடர் மக்களுக்கு தாட்கோ மானியமாக 30 சதவிகிதம் அல்லது ரூ.2,25,000 மற்றும் பழங்குடியின மக்களுக்கு தாட்கோ மானியமாக 50 சதவிகிதம் அல்லது ரூ.3,75,000 அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவ,மாணவியர்களுக்கு அளிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவிக்கு தாட்கோ மானியமாக 50 சதவிகிதம் அல்லது ரூ.2,50,000 அளிக்கப்படுகிறது.

மேலும் புதிய அறிவிப்பில் தாட்கோ மூலம் சந்தை மதிப்பீட்டு விளைக்கு நிலம் வாங்கும் திட்டத்திற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,00,000 அளிக்கப்படுகிறது எனவும்,தாட்கோ திட்டத்தில் பயன்பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,00,000 இலட்சத்திலிருந்து ரூ.3,00,000 இலட்சமாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இவற்றை முழுமையாக புரிந்துகொண்டு திட்டங்களை பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்களும், 5 நபர்களுக்கு தனிநபர் கடன்களும் என மொத்தம் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களை தாட்கோ கழகத் தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தாட்கோ மாவட்ட மேலாளர் க.இந்திரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.ஏ.சீனிவாசன்,மீன்வள உதவி இயக்குநர் வெற்றிவேலன், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரவி,பொன்னேரி நகரமன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.