மணவாளநகரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி : ஆசிரியர்களின் காலில் விழுந்து மாணவர்கள் ஆசி 85 வயது முன்னாள் ஆசிரியரின் பிறந்த நாளை கேக் வெட்டியும் கொண்டாடினர் :

பதிவு:2022-09-13 14:32:42

திருவள்ளூர் செப் 13 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1982 முதல் 1987 வரை 6-லிருந்து 10-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஆர்.பாலாஜி, தனுஜா, லஷ்மி, ஜெயக்குமார், அருண், சிவக்குமார் நாகராஜ், சுப்பிரமணி, ராமானுஜம், இளவரசன், ஹரி கேசவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பி.வி.மணி, முன்னாள் ஆசிரியர்கள் தேவகியம்மாள், கிருஷ்ணவேணி, வசந்தா, தனுஷ்கோடி ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்ததால் தன்னுடன் பயின்ற சக மாணவரை பார்த்த உடன் கட்டிப்படித்து உற்சாகமடைவதுடன், கை குலுக்கி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் செல்போன் மூலம் செல்பியும் எடுத்தும் மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்தனர். அதனைத் தொடர்ந்து தனக்கு பாடம் சொல்லித் தந்ததால் நல்ல நிலையில் இருக்க காரணமான ஆசிரியர்களின் காலில் விழுந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் ஆசியும் பெற்றனர் இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக முன்னாள் தலைமை ஆசிரியிரின் மனைவியும், முன்னாள் ஆசிரியருமான தேவகியம்மாளின் 85-வது பிறந்த நாளையும் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பி.வி.மணி எழுதிய மலரும் நினைவுகள் புத்தகத்தையும் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஜீவரத்தினம், விஜயராகவன், உதயகுமார், அண்ணாமலை, ஏ.அமுல், ராமச்சந்திரபாபு, விநாயகம், ராஜேஸ்வரி, மேகலா, வேளாங்கன்னி, மீனா, சரளா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.