முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த டேனியா என்ற சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நலம் விசாரித்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார் :

பதிவு:2022-09-13 14:36:11



முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த டேனியா என்ற சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நலம் விசாரித்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார் :

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த டேனியா என்ற சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நலம் விசாரித்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார் :

திருவள்ளூர் செப் 13 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மோரை பகுதியைச் சேர்ந்த டேனியா என்ற சிறுமி முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதால் பூவிருந்தவல்லி அடுத்து உள்ள தண்டலம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, குணமடைந்ததைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அச்சிறுமியை நலம் விசாரித்து, வீட்டிற்கு வழியனுப்பி வைத்து பேசினார்.

சின்னஞ்சிறு குழந்தை டேனியா பேரி ரோம்பட் சின்ரோம் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அவல குறலை தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து,பூவிருந்தவல்லி அடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அச்சிறுமிக்கு அளித்த சிகிச்சையில் 10 மருத்துவக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அந்த குழந்தையை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தி, 23.08.2022 அன்று அந்த சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த குழந்தை பூரண குணமடைந்து இன்றைய தினம் இல்லத்திற்கு செல்ல இருக்கிறார்.

அந்த குழந்தையின் முகம் பழைய நிலைக்கு வருவதற்கான நிலைப்பாடு உள்ளது. அதுமட்டுமல்லாமல், பெற்றோர்கள், அந்த குழந்தைக்கு இருக்க இருப்பிட இடமும், அவர்களுக்கு தேவையான வீடும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கேட்டிருக்கின்றார்.அதன் அடிப்படையில், அவர்களுக்கு தேவையான வீடு ஒரு சில நாட்களில் ஒதுக்கி தருவதற்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் முழு முயற்சியுடன் மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த குழந்தைக்கு ஏறக்குறைய 80 சதவிகிதம் சரியாகி உள்ளது. மீதமுள்ள 20 சதவிகிதம் ஓரிரு நாட்களில் சரியாகும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்று முதலமைச்சர் வீடு திரும்புவது குறித்தும் கேட்டறிந்து என்னை இம்மருத்துவமனைக்கு நேடியாக சென்று அச்சிறுமியை வழியனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவின்படி, இன்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை பாராட்டி, அம்மருத்துவ குழுவினருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு,அச்சிறுமியை பெற்றோருடன் வீட்டிற்கு வழியனுப்பினோம்.இதற்கான செலவு ஏறக்குறைய ரூ.15 இலட்சத்திற்கு மேலாகும். இச்செலவு முழுக்க முழுக்க அரசு ஏற்றுக்கொண்டது என்று கூறினார்.

இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் எம்.ஏ.இளங்கோவன், பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவனர் வீரய்யன், மருத்துவ கல்லூரி இயக்குநர் தீபக் நல்லசாமி, மருத்துவ கல்லூரி முதல்வர் தாமோதரன், மருத்துவக் குழு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்