திருவள்ளூரில் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் “காஃபி வித் கலெக்டர்”என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரையாடல் :

பதிவு:2022-09-14 11:49:34

திருவள்ளூர் செப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கத்தில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்10-வது முதல் 12-வது வகுப்பு வரை பயிலும் 21 மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் “காஃபி வித் கலெக்டர்” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அம்மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார்.

மாணவ, மாணவியர்கள் அன்றாடம் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை நாளை பார்ததுக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் அன்று நடத்திய பாடங்களை அன்றே படித்து, மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தினமும் படிப்பதற்கான நேரத்தை ஒதுக்கி, அதற்கான திட்டத்தை வகுத்து படிக்கும் முறையை அறிந்து படிக்க வேண்டும்.

மேலும், இந்த பருவத்தில் தேவையற்ற பழக்க வழக்கங்களுக்கு தங்களை ஆட்படுத்திகொள்ளாமல் ஒழுக்கத்தோடு கற்கின்ற கல்வி தங்களது வாழ்வை உயர்த்தும் என்பதனை உணர்ந்தும், இந்த வயதில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே கடமை படிப்பது தான் என்பதனை உணர்ந்தும் மாணவ, மாணவியர்கள் செயல்பட்டால் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும். அத்தகைய சிறப்பான வாழ்க்கையை பெறுகின்ற மாணவ, மாணவியர்களாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.இதில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.