திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் :

பதிவு:2022-09-14 18:37:48

திருவள்ளூர் செப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலர் அறிவுரைப்படிநகர்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளை மறு சீரமைப்பு செய்து வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,657 முதன்மை வாக்குச் சாவடிகளில் புதிய பாகங்கள் ஏற்படுத்துதல், வாக்குச் சாவடி அமைவிடத்தை மாற்றுதல்,பெயர் மாற்றம் மற்றும் பாகங்களில் உள்ள பிரிவுகளை சீரமைத்தல் செய்து வரைவு வாக்குச் சாவடி பட்டியல் 29.08.2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும், அதன் பேரில் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துப் பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களுக்கு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 தினங்களுக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது மறுசீரமைக்கப்பட்ட பின் பாகங்களின் எண்ணிக்கை : கும்மிப்பூண்டி - 330,பொன்னேரி - 311,திருத்தணி - 330,திருவள்ளூர் - 296,பூந்தமல்லி - 387,ஆவடி - 436,மதுரவாயல் - 440, அம்பத்தூர் - 349,மாதவரம் - 467,திருவொற்றியூர் -311 என மொத்தம் -3657 மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி முன்மொழிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பிட கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது தேர்தல்) முரளி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வம், பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.