திருவள்ளூரில் இலவசமாக வழங்கப்பட்ட எண்ணியல் கணினி பயிற்சியை நிறைவு செய்த 86 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள்

பதிவு:2022-09-15 15:29:46



திருவள்ளூரில் இலவசமாக வழங்கப்பட்ட எண்ணியல் கணினி பயிற்சியை நிறைவு செய்த 86 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் இலவசமாக வழங்கப்பட்ட எண்ணியல் கணினி பயிற்சியை நிறைவு செய்த 86 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள்

திருவள்ளூர் செப் 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவசமாக வழங்கப்பட்ட எண்ணியல் கணினி பயிற்சியில் பங்கு பெற்று பயிற்சியை நிறைவு செய்த ஈக்காடு ஒன்றியத்தைச் சார்ந்த 86 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் எண்ணியல் கணினி பயிற்சியில் தேசிய தகவல் மையம் மற்றும் அலுவலர்கள் மூலமாக 13.09.2022 மற்றும் 14.09.2022 ஆகிய இரண்டு நாட்களாக ஈக்காடு ஒன்றியத்தைச் சார்ந்த 86 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்பயிற்சியில் பங்கு பெற்ற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களை பாராட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் ரவீந்திரன், பயிற்சி அலுவலர் கோபிநாத், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.