திருவள்ளூர் அருகே போலியான ஆவணத்தைக் கொண்டு ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் கிராம நிர்வாக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார்

பதிவு:2022-09-15 15:42:19

திருவள்ளூர் செப் 15 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கண்ணடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.வாசு (50). இவரது பூர்வீக சொத்தானது கண்ணடப்பாளையம் அடுத்த கோவில் பதாகை கிராமத்தில் சர்வே எண் 215-ல் 1.39 ஏக்கர் நிலமும், 217/1 ல் 1.27 ஏக்கர் நிலத்தையும் பூர்வீக சொத்தாக இதுவரையிலும் ஆண்டு அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில்பதாகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ரவி என்பவர் இவரது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் போலியான ஆவணத்தைக் கொண்டு மிரட்டி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியாதகவும், தனது பதவியைக் கொண்டு போலியான ஆவமத்தை கொண்டு பணம் பறிக்கும் எண்ணத்தில் ஈடுட்ட ரவி என்பவர் மீதும் அவருக்கு போலி ஆவண முறைகேட்டில் உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாசு கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்ததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.