பதிவு:2022-09-15 15:45:09
இந்து மதத்தை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை மு.க ஸ்டாலின் குண்டாசில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை
திருவள்ளூர் செப் 15 : கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வேசிகளின் மகன்கள் என சர்ச்சைக்குரிய விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்துக்களை கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தென் சென்னை மாவட்ட ஊடகப்பிரிவு துணை தலைவர் கருத்து காமராஜ், மு.க ஸ்டாலின் ஆ.ராசா மீது தக்க நடவடிக்கை எடுத்து குண்டாஸில் கைது செய்ய வேண்டும்,இந்துக்களைப் பற்றி தவறாக பேசும் ஆ.ராசா கிறிஸ்தவ மதத்தையும் இஸ்லாமிய மதத்தையும் பற்றி பேசினால் செருப்பால் அடித்து இருப்பார்கள்.தமிழகத்தில் 90 சதவீத வாக்குகள் இந்துக்கள் தான் இருக்கிறோம், மு.க.ஸ்டாலினின் மனைவியும் ஒரு இந்து தான் எனவும் ,வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்துக்களை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பேசியவர்களுக்கு இந்துகள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.