ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பொன்பாடியில் வாகன சோதனையின் போது பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது :

பதிவு:2022-09-15 15:47:04

திருவள்ளூர் செப் 15 : தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான திருத்தணி வழியாக ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. காவல் துறையினர் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டாலும், கஞ்சாவை கடத்தி வருபவர்கள் காவல் துறையினரின் கண்களில் படாமல் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைத் சாவடி வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கனகம்மாசத்திரம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பையை சோதனை செய்த போது அதில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜு, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.