பேரம்பாக்கத்தில் தாய் இறந்த சோகத்தில் கல்லூரி முதலாமாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பதிவு:2022-09-15 15:48:45



பேரம்பாக்கத்தில் தாய் இறந்த சோகத்தில் கல்லூரி முதலாமாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பேரம்பாக்கத்தில் தாய் இறந்த சோகத்தில் கல்லூரி முதலாமாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் செப் 15 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.இவரது மகன் மோகன் (18). இவரது தாயார் ராதிகா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இதனால் தாய் இறந்த சோகத்தில் மோகன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ் 2 முடித்த மோகன் சில தினங்களுக்கு முன்பு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் கல்லூரி இன்னும் திறக்கப்படாத நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு சப் -இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் இறந்த சோகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.