பதிவு:2022-04-02 01:25:48
திருவள்ளூரில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு : தொழிற்சங்க பேரவை செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்து :
திருவள்ளூர் ஏப் 02 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுகவில் அடங்கிய திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொதட்டூர்பேட்டை ஆகிய 3 பணிகளில் அண்ணாதொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் பல நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இன்று நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளறும் முன்னாள் அமைசச்ருமான பி.வி.,ரமணா முன்னிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவுை மாநில செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு பொதட்டூர்பேட்டை, திருத்தணி, மற்றும் திருவள்ளூர் பணிமனைகளில் தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் இணை நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முறையாக அறிவித்தனர்.
அப்போது பேசிய பேரவை செயலாளர் கமலக்கண்ணன், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி அந்த போராட்டத்தை முறியடித்ததாகவும், வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, தகராறில் ஈடுபட்டவர்கள் மீது அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் எச்சரித்தார்.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் போராட்ட காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.,ரமணா கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டனர்.