பதிவு:2022-09-18 08:25:37
திருவள்ளூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி திமுக, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை :
திருவள்ளூர் செப் 16 : பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதே போல் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளருமான கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நரேஷ், கூட்டுறவு சங்க நிர்வாகி நேசன், நகர் மன்ற முன்னாள் கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட அவைத் தலைவர் கே திராவிட பக்தன் திருவள்ளூர் நகராட்சி முன்னாள் தலைவர் திராச குமார் திராவிட மணி தனசேகரன் ராஜி ஆர் டில்லி ராயப்பா தயாளன் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதே போல் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அண்ணாவின் சிலை மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான திருத்தணி கோ.ஹரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். இதில் ஆவின் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி ஜெயசேகர்பாபு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு அண்ணா, எம்,ஜி,ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே போல் ஊத்துக்கோட்டை,பள்ளிப்பட்டு,கும்மிடிப்பூண்டி என மாவட்ட முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி திமுக,அதிமுகவினர் அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.