திருவள்ளூர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முன்னிட்டு மிதிவண்டி போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2022-09-19 00:04:03



திருவள்ளூர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முன்னிட்டு மிதிவண்டி போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முன்னிட்டு மிதிவண்டி போட்டி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட மிதிவண்டி போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மிதிவண்டி போட்டிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இப்போட்டியானது, 13 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பிரிவினருக்கும், 15 வயதிற்குட்பட்ட ஆண், பெண் பிரிவினருக்கும் மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பிரிவினருக்கும் நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ.5000 முதல் பரிசும், ரூ.3000-ம் இரண்டாம் பரிசும், ரூ.2000-ம் மூன்றாம் பரிசு தொகைகள் காசோலையாக வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பிரிவிலும் 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசு தொகையினை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் 13 வயதுக்குட்பட்ட 44 மாணவர்கள் மற்றும் 38 மாணவியர்கள் என மொத்தம் 82 நபர்கள் கலந்து கொண்டனர்.

15 வயதுக்குட்பட்ட 52 மாணவர்கள் மற்றும் 37 மாணவியர்கள் என மொத்தம் 89 நபர்கள் கலந்து கொண்டனர். 17 வயதுக்குட்பட்ட 58 மாணவர்கள், 21 மாணவியர்கள் என மொத்தம் 79 என ஒட்டுமொத்தமாக 250 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.இப்போட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, பூண்டி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.