திருவள்ளுர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-09-19 00:12:50



திருவள்ளுர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளுர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் செப் 17 : உலக சுற்றுலா தினமாக செப்டம்பர் -27ஆம் நாளினை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையப்படுத்தி அதன்மூலம் உலகளவில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தை சுற்றுலா மறு சிந்தனை என கருப்பொருளை அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் வருடந்தோறும் செப்டம்பர்-27-ந் தேதி அன்று உலக சுற்றுலா தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எண்.1, சிவா விஷ்னு தெரு, ராஜாஜிபுரம் பகுதி -1 ல் வரும் 27.09.2022 அன்று காலை 9.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுலா தலங்கள் தொடர்பான வினா-விடை போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் ஸ்டேட், சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன் மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணாக்கர்கள் பங்கேற்கலாம். ஒரே பள்ளியிலிருந்து அதிகபட்சமாக மூன்று குழுக்கள் வரை பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் குழுக்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.

For Registration: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekb4fbp4i2X4AHRqBUa8gbmXMCH4kSquEkTo2h6Z38dK4keA/viewform ,மேலும் விவரங்களுக்கு, சுற்றுலா அலுவலர், திருவள்ளூர் மாவட்டம், தொலைபேசி எண். 044-27666007,7397715675. மின்னஞ்சல் :to.thiruvallur@gmail.com எனவே, பள்ளி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்க மேற்கண்ட பள்ளிக்கு 27.09.2022 அன்று காலை 9.30 மணிக்குள் வருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.