திருவள்ளூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 163 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு :

பதிவு:2022-09-19 02:45:26

திருவள்ளூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 163 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு :

திருவள்ளூரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 163 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு :

திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமது அலி தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் முகமது அலி தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்ததில் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் உதயா என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து குட்காவை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 163 கிலோ எடை கொண்ட 3 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்த சிறப்பு பிரிவு போலீசார் அதனை திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி யிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து குட்கா போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்த உதயா என்பவரை தேடி வருகின்றனர்.