பதிவு:2022-09-19 02:50:54
சென்னை வியாசர்பாடி இளைஞர் பஜா என்ற கார்த்திக் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரண் :
சென்னை செப் 17 : சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பஜா கார்த்திக் (31) என்ற இளைஞரை முன் விரோதம் காரணமாக கடந்த 14 ஆம் தேதி பெரம்பூர் மயானத்தில் அவர் நண்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஏற்கனவே காட்டான் மோகன், பிஸ்தா கார்த்திக், செந்தில்குமார், சரவணன் ஆகிய 4 பேரை சென்னை, செம்பியம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளிகளான மது என்ற மாதவன், சத்தியநாராயணன் ஆகிய 2 பேர் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.மேலும் கார்த்திக் கொலை வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் முக்கிய குற்றவாளி மது என்ற மாதவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டால் தான் உண்மை தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.