தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ் நுணுக்கங்களை வழங்கினார் :

பதிவு:2022-04-02 17:21:57



திருவள்ளூரில் மாபெரும் முதலாவது புத்தக திருவிழா : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ் நுணுக்கங்களை வழங்கினார் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ்  நுணுக்கங்களை வழங்கினார் :

திருவள்ளூர் ஏப் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் முதலாவது புத்தக திருவிழா - 2022-ன் முதல் நாளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், அரசு பணியாளர் தேர்வுக்கான புத்தகங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் சுமார் ரூ.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதை தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ் முன்னிலையில் மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, “நம்ம ஊரு அதிகாரி” என்ற தலைப்பில் ஆட்சியர் கலந்துரையாடல் நிகழ்வில், ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ் குருப்-1 தேர்வின் வெற்றியாளர்களான உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ்,.ஐஸ்வர்யா ராமநாதன்(வேலூர்),பிரியங்கா (திண்டுக்கல்),சரண்யா ராமச்சந்திரன் (கோயம்புத்தூர்), ஸ்ருதன்ஜெய் நாராயணன் (தூத்துக்குடி), சுகாதார இயக்க துணை இயக்குநர் கந்தசாமி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா மற்றும் துணை ஆட்சியர் பிரவினா குமாரி ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

பின்னர் உலக ஆர்ட்டிசம் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் Hope Public Charitable Trust சார்பாக ஆர்ட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான விழிப்புணர்வு பதாகைகளை ஆட்சியர் வெளியிட்டு, ஆர்ட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான உபகரணங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களிலும்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு பயி;ற்சி வகுப்பு ஆரம்பித்தல் திட்டத்தின் கீழ் கற்போர் வட்டம் “நம்ம THIRUVALLUR 25 YEARS CELEBRATIONS” என்ற இலட்சையினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தொடர்ந்து நகைச்சுவை பேச்சாளர் ஈரோடு மகேஷ் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அம்மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, பயிற்சிக்கு தேவையான நுணுக்கங்களை தமது நகைச்சுவை பேச்சால் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் க.விஜயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு,Hope Public Charitable Trust நிறுவனர் பி.நாகராணி, பேச்சுப் பயிற்சியாளர், சிறப்பு ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.