திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் :

பதிவு:2022-09-19 05:32:53



திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் :

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் :

திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் கடந்த 35 ஆண்டுகளாக சமுதாய மேம்பாட்டு பணியினை செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் சுய தொழில் செய்து முன்னேறுவதற்கு ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளை பல கட்டங்களாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்தனர்.

பின்னர் 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி பெங்களூரைச் சார்ந்த எனேபில் இந்தியா, இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் நிறுவனத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள்,பண்புகள் , தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் , விலை நிர்ணயம் செய்தல். சந்தைபடுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள்,மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்களை, தடைகளை எதிர்கொள்ளும் விதம் , தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் 10 நாட்கள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் தனசிங், பயிற்றுனர் முரளி, எனேபில் இந்தியா திட்ட அலுவலர்கள் விமல், ஆல்ட்ரின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இதில் பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சேகர், ரமேஷ் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் மற்றும் திட்ட மேலாளர் விஜயன், கள ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, தபித்தாள் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.