பதிவு:2022-09-19 08:05:52
திருமுல்லைவாயல் அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 143 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.
.
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவச் செல்வங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று தற்பொழுது உயர் கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ரூ.1000-ம் என அவர்களின் கல்வி செலவுக்கென வங்கி கணக்கில் பற்று வைக்கப்படும் என்ற திட்டம். அதே மாதிரி இல்லந்தேடி கல்வி, அந்த வகையில், இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு திட்டமான காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு மாணவருக்கு ஏறக்குறைய ரூ.12.50 செலவாகவும், அதற்காக முதற்கட்டமாக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,099 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், மாணவர்கள் நடந்து வராக்கூடாது என்ற நோக்கத்தோடு விலையில்லா மிதிவண்டியை வழங்கி வருகிறார். அதில் ஒரு கட்டமாக ஆவடி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 143 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
முன்னதாக, நரிக்குறவர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உதவி புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் விதமாக திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் பால்வளத்துறை அமைச்சருக்கு பூக்கொத்து மற்றும் பாசிமணி மாலைகளை வழங்கி, நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாநகராட்சி பணிக் குழுத் தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.