திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

பதிவு:2022-09-19 08:26:45



திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை” பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் அப்பள்ளியில் உள்ள உணவு கூடத்தை ஆய்வு செய்து, மாணவ, மாணவியர்களுக்கு உணவூட்டி, மாணவ, மாணவியர்களோடு உணவறிந்தினார். அதனைத் தொடர்ந்து, “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” குறித்த விழிப்புணர்வு குறும் படத்தை பார்வையிட்டு பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் மீது அக்கறை கொண்டு ஒவ்வொரு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். கல்வியறிவு பெறுவதோடு, அந்த கல்வியறிவை பெறுகின்ற மாணவச் செல்வங்கள் காலையில் தொலை தூரத்திலிருந்து வருகின்ற காரணத்தாலும், காலையில் பள்ளிக்கு சீக்கிரம் வருகின்ற காரணத்தாலும், அவர்களின் வீட்டில் சமையல் செய்வது தாமதமாக இருப்பதாலும் ஒரு சில பிள்ளைகள் பசியோடு வருவதாலும், பசியில் இருக்கும்போது ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உள்வாங்க இயலாது. அவர்களின் சிந்தனையெல்லாம் பசியில் தான் இருக்கும் என்பதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் இந்த காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி துவக்கி வைத்திருக்கிறார்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை முக்கிய நோக்கங்களாக ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கவும் கற்றலின் இடைநிற்றலை தவிர்க்கவும் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ்,ஆவடி மாநகராட்சி துணை மேயர் ச.சூரியகுமார், திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர்.ஸ்ரீதர், மாநகராட்சி பணிக் குழுத் தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழுத் தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.