பதிவு:2022-09-19 08:30:06
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஏழை எளிய மக்களை வஞ்சிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என்று திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஷாக் அடிக்குது ஷாக் அடிக்குது மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது இன்று முழக்கமிட்டனர்.
மேலும் சொத்து வரி, வீட்டு வரி குடிநீர் வரி கழிவு நீர் இணைப்பு கட்டணமும் உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரியப்படுத்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.ஹரி, மாவட்ட துணை செயலாளர் கமேண்டோ பாஸ்கரன் மற்றும் கடம்பத்தூர், பூண்டி, திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திருவள்ளூர் நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.