பதிவு:2022-09-19 13:08:03
கனகம்மா சத்திரத்திலிருந்து ஆந்திராவிற்கு பால் வேனில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவரை போலீசார் கைது :
திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மூலம் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பெயரில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக சென்ற பால் வேன் ஒன்று வேகமாகச் சென்றது. அதனை மடக்கி பிடித்து வேன் ஓட்டுனரை விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்தனர்.
அதில் அவர் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த பிரசன்ன குமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர் தமிழகத்திலிருந்து பால் வேன் மூலம் ரேஷன் அரிசியை கடத்தி ஆந்திராவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பிறகு அவரை கைது செய்த கனகம்மாசத்திரம் போலீசார் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.