பதிவு:2022-09-19 13:14:55
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் : 300-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர் :
திருவள்ளூர் செப் 19 : பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமில் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரதமர் நரேந்திரமோடி 72-வது பிறந்த நாளையொட்டி மத்திய மாநில அரசு மற்றும் தேசிய நலவாழ்வு மையம் வழிகாட்டுதல்படி ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குருதி பரிமாற்று அலுவலர் தே.பிரதீபா தலைமை வகித்தார். இதில் அக்கல்லூரியின் துணை முதல்வர் ந.திலகவதி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய அதிகாரி ராஜ்குமார் வரவேற்றார். இந்த முகாமில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் எம்.ஏ.இளங்கோவன் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் ஜெகதீசன், தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். இந்த முகாமில் பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் பங்கேற்று ரத்ததானம் செய்தோர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இதில் நிறைவாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் ஆர்.ஜவஹர்லால் நன்றி கூறினார்.
இதில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா, மாநில ஒபிசி அணி பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், லயன் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், நகரத் தலைவர் சதிஷ்குமார், மாநில செயலாளர் தொழில் நுட்ப பிரிவு ரகு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி, இளைஞரணி மாவட்ட செயலாளர் டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.