திருவள்ளூரில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவு அஞ்சலி :

பதிவு:2022-09-19 13:17:41



திருவள்ளூரில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவு அஞ்சலி :

திருவள்ளூரில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு பாமக சார்பில் நினைவு அஞ்சலி :

திருவள்ளூர் செப் 19 : தமிழகத்தில் கடந்த 1987 - ல் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 108 சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் 21 பேர் உயிர் நீத்தனர். இதனால் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுறு்ததலின் பேரில் கடந்த 35 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமை வகித்தார். கடம்பத்தூர் ஒன்றிய விஜயராகவன் வரவேற்றார். இதில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பாலா என்கிற பாலயோகி ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி,மலர் தூவி,வீரவணக்கம் செலுத்தி உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூபதி , சமூக முன்னேற்றசங்க நிர்வாகி செல்வம், நகர செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் குமார் , சுரேஷ், ஏழமலை, பிரபாகரன், பொன்னுசாமி, சீனு, பா.சித்ரா, அமுதவல்லி, ந.மோதிலால்மதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.