திருவள்ளூரில் அனுமதி பெறாத திமுக பிரமுகரின் பார் உள்ளிட்ட 4 டாஸ்மாக் பார்களில் போலீசார் அதிரடி சோதனை : 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் : 5 பேரை கைது செய்து விசாரணை :

பதிவு:2022-09-19 13:20:56

திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் நகரில் 24 மணி நேரமும் அனுமதி பெறாத டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் டிஎஸ்பி. சந்திரதாசனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகாரின் பேரில் காலை 8 மணி அளவில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் டவுன் போலீசார் திருவள்ளூர் நகரை சுற்றி இருக்கும் 4 டாஸ்மாக் பார்களை திடீர் சோதனை நடத்தினர்.

இதில் சி.வி.என்.சாலையில் உள்ள பார், பேருந்து நிலையம் அருகில் உள்ள திமுக பிரமுகர் குரு என்பவர் அனுமதி பெறாமல் நடத்தும் பார் உள்ளிட்ட 4 டாஸ்மாக் பார்களில் சோதனை செய்தனர். இதில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து 500-க்கும் மேற்பட்ட குவாட்டர் மற்றும் பீர் வகை மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அனுமதி பெறாமலும், 24 மணி நேரமும் செயல்படும் மதுபான பார்களில் இனி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி சந்திரதாசன் எச்சரித்து பறிமுதல் செய்யப்பட்ட மது பானங்களை திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் பார் உரி்மையாளர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.